கமல் மீது மதுமிதா புகார்

0
87

பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றார்கள். இதுவரை பல விதமான பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துள்ளது. முக்கியமாக இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சாக்சி அகர்வால், சரவணன், ரேஷ்மா, கஸ்தூரி, மதுமிதா, வனிதா விஜயகுமார் என பலர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியாகிருந்தனர். இதில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துந்துள்ளார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சியில் அதிரடியாக வெளியேற்றப்பட்டது மதுமிதா அவர்கள். ஏனென்றால் மதுமிதா அவர்கள் தற்கொலைக்கு முயன்றதால் அவரை வெளியேற்றியதாக தகவல் வெளிவந்திருந்தது. இதுமட்டுமில்லாமல் இவர் காவேரி பிரச்னையை பேசியதால் வெளியை அனுப்பப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பிறகு விஜய் டிவி மதுமிதா மீது கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தரர்கள்.

அந்த புகாரில் மதுமிதா எங்களிடம் இன்னும் இரண்டு நாளில் பாக்கி பணத்தை தருமாறு தொல்லை செய்வது மட்டுமில்லாமல் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுவதாக தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுருந்தனர். அதை பொய் புகார் என மதுமிதா தெரிவித்ததால் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து பெரும் மூச்சி விட்ட நேரத்தில் மீண்டும் பூதாகரமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இன்று நடிகை மதுமிதா நசரத் பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் கொடுத்துள்ளார் அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தினார்கள். இவ்வளவு பிரச்சனை நடந்து உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் ஒரு வார்த்தை கூட கேட்டு போட்டியாளர்களை கண்டிக்கவில்லை என்று கமல் அவர்கள் மீதும் குற்றசாட்டு வைத்துள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here