‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி

0
48

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிற படம்தான் பிகில். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக தீபாவளிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தளபதி ரசிகர்கள் சந்தோசபடுத்தும் விதமாக சில தகவல்களை நமக்கு கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால், வெளியாக இருக்கும் பிகில் படம் இதுவரை இல்லாதா சாதனையாக, தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் பிகில் திரையிடப்படும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே, இந்த முயற்சி என்று தெரிவித்துள்ளார். முக்கியமாக தளபதி விஜய் அவர்களை தவிர லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, ஆனந்தராஜ், யோகி பாபு, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியாகியிருந்த சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் பயங்கரமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிந்த இந்த நிலையில், பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கான தகவலும் இதுதான் என்று ஒரு சில செய்திகள் கசிந்து வருகின்றனர். இதனால் தளபதி ரசிகர்கள் ஆர்வமாக இசை வெளியிட்டு விழாவிற்க்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here