ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு !!

0
54

விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும், பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவருமான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட வழக்கில் சிக்கினார் என்பது தெரிந்ததே.ராஜ்குந்த்ரா மீது வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கின்றதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தனது கணவர் குறித்த வழக்கில் தன்னை பற்றியும் பொய்யான செய்திகளை வெளியிட்ட 29 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு ஒன்றை ஷில்பா ஷெட்டி பதிவு செய்துள்ளார். இந்த அவதூறு வழக்கில் ஊடகங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here