உறியடி 2 பட திரைவிமர்சனம்

நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமார் இயக்குனதுமட்டுமில்லாமல் உறியடி 2 வில் நடித்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள உறியடி 2 திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம் :

கல்லூரி மாணவனாகவும் அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும் தட்டி கேட்கும் சமூக போராளியாகவும் நடித்துள்ளார் விஜய் குமார்.

விஜய் குமார் வசித்து வரும் செங்கதிர் மலை கிராமத்தில் உலக நாடுகளில் தடை செய்யபட்ட மருந்து ஆலையை வழக்கம் போல அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கி கொண்டு திறக்கின்றனர்.

இதனால் அந்த கிராமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் எந்தளவிற்கு பாதிப்புகளை சந்திக்கின்றன? இவற்றிலிருந்து இப்பகுதி மக்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிப்பு :

விஜயகுமார், பரிதாபங்கள் சுதாகர், விஸ்மயா ஆகியோரின் நடிப்பு அற்புதம். குறிப்பாக அரசியல் வசனங்கள் படத்தில் பட்டய கிளப்புகின்றன. மக்களிடம் கை தட்டல்களை வாங்கி குவிகின்றன. அதே நேரத்தில் நம்மை சிந்திக்கவும் வைக்கின்றது.

இசை :

96, சீதக்காதி போன்ற படங்களின் மூலம் தன்னுடைய அபார திறமையால் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த இசைமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் :

அரசியல் காலத்திற்க்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் என்பவர் இப்படத்திற்கு அருமையான ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே போல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ள லினு இப்படத்திற்கு என்ன தேவையோ அதனை உணர்ந்து பணியாற்றியுள்ளார்.

இயக்கம் :

தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு ஒரு சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் விஜய் குமார் இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்ட வேண்டிய விசியம். மேலும், இது போன்ற படங்களுக்கு தயாரப்பில் இறங்கி தன் பங்கையும் இந்த படத்தில் நிறைவு செய்திருக்கின்ற நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.

தம்ப்ஸ் அப் :

1. திரைக்கதை
2. அரசியல் வசனங்கள்
3. இசை
4. சமுக கருத்து

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here