ரசூல் பூக்குட்டியின் ஒரு கதை சொல்ல்லட்டுமா திரைவிமர்சனம்

பால்ம்ஸ்டோன் மல்டிமீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரசூல் பூக்குட்டி, அஜய் மத்தியூ நடிப்பில் வெளியாகிருக்க ஒரு கதை சொல்லட்டுமா திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம் :

இந்தியாவில் நடைபெறும் இந்து மத விழாக்களில் புகழ் பெற்ற ஒன்றான திருச்சூர் பூரம் ஒலிப்பதிவு செய்து அதை மக்களிக்கிட்டா சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட ரசூல் எப்பிடி பல தடைகளை தாண்டி செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்
ஒரு டாக்குமெண்டரி மாதிரியும் இல்லாமல் ஒரு திரைப்படமாதிரியும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருப்பதுபோல் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தை இயக்கிருக்கிறார் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.

நடிப்பு :

சினிமாவுக்கான மாபெரும் உயரிய விருதான ஆஸ்கர் விருது மற்றும் பல விருதுகளை வென்ற ஆஸ்கர் நாயகன் இந்த படத்தில் நிஜ கதாநாயகனா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் அவர் அவராகவே படம் முழுவதும் வளம் வந்துள்ளார்.

திருச்சூர் விழாவின் தயாரிப்பாளராக அஜய் மாத்யூ நடித்துள்ளார். பணம் திமிரு கொண்ட வில்லனாக அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தினாலும் ரசூலை அவமதிக்கும் வேளைகளில் கோபம் என்னவே நமக்கு கோபம் வருகிறது.

ரசூல் மற்றும் அஜய் அஜய் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிக்கொணர்த்துள்ளனர்.

இசை :

ராகுல் ராஜ் மற்றும் சஹாரித் என இரண்டு பேரும் பின்னணி இசையில் கவர்ந்துள்ளனர். குறிப்பாக திருச்சூர் பூரம் விழாவுக்காக முழங்கப்படும் வாத்தியங்கள் அதன் பின்னணி இசையும் நம்மை ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்:

ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு:

சினிமாவில் தற்போது ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்று ஒளிப்பதிவு. இந்த படத்தில் எப்படி இருந்தது என்று கேட்டால் திருச்சூர் விழாவில் நாமும் கலந்த உணர்வை கொடுத்துள்ளது.

ஒரு கதை சொல்லட்டுமா படத்தின் கருவாக இருக்கும் ஒலிப்பதிவு இந்த படத்தின் உயிர் நாடியாக திகழ்ந்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. ஒலிப்பதிவு
2. ஒளிப்பதிவு
3. இசை

பல்ப்ஸ்:

ஒரு கதை சொல்ல்லட்டுமா படத்தில் ரசூல் லின் லிப் சிங் பல இடங்களில் செட்டாகவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *