திருமணத்துக்கு பச்சை கொடி!!

பந்தை எவ்வளவு தான் தண்ணீற்குள் அழுத்தினாலும் அது மேலே வரத்தான் செய்யும்.  தற்போது மனம் திறக்கிறார் டாப்சீ பன்னு !!தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, இப்போது தனது வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு இடையில் இவர் தனித்துவமாக காணப்படுகிறார்.

சமீபகாலமாக, ஒரு வெளிநாட்டினருடன் டாப்ஸி பன்னு காதலில் இருப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்துள்ளன, ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்நிலையில், பிரபல ஆன்லைன் பாலிவுட் பொர்டலுக்கு டாப்ஸி யிடமிருந்து இது குறித்த செய்தி கிடைத்துள்ளது, அதுவும் அவரது தாயின் முன்னால்.

ஒரு அன்னையர் தின சிறப்பு நேர்காணலில், டென்மார்க்கில் வசிக்கும் பூப்பந்து வீரர் மத்தியாஸ் போவுடன் (Mathias Boe) டேட்டிங் செய்வதாக டாப்ஸி மனம் திறந்துள்ளார். மேலும், அவர் கூறுகையில் “என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார், என் குடும்பத்திற்கு இது பற்றி தெரியும். என் குடும்பம், என் சகோதரி மற்றும் எனது பெற்றோர் உட்பட அவர்கள் என்னுடன் இருக்கும் நபரை விரும்பவேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியம். இல்லையென்றால் அது எனக்கு சரிபட்டு வராது” என்றார்.

ஏப்ரல் 2020-இல் மத்தியாஸ் போ, தனது 39 வயதில் தொழில்முறை பூப்பந்து வீரராக ஓய்வு பெற முடிவு செய்தார். மனரீதியாக, அவர் சமீபத்தில் பயிற்சி மற்றும் போட்டி இரண்டிலும் மிகவும் சோர்வடைந்துள்ளார் என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவரும் டாப்ஸியும் மிக விரைவில் திருமனம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

டாப்ஸி பன்னு, தமிழில் அடுத்ததாக அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜன கண மன’ திரைப்படத்தில் நடிக்கிறார். இருந்தும் திருமணத்திற்கு பிறகு டாப்சீ நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டு இருக்கிறது.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here