பிரபல பாடலாசிரியர் காலமானார்

எழில் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மேகமாய் வந்தப் போகிறேன் என்ற பாடல் மூலம் அறிமுகமான பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நல குறைவால் காலமானார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தை தொடர்ந்து பிரபு தேவா படமான ‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தில் உள்ள கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடல் மூலமாகவும் பிரபலமடைந்து கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். ஒரு படலாசிரியாராக மட்டுமில்லாமல் வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்ட ஒரு மனிதராக திரையுலகில் ஜொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக மஞ்சள் காமாலை நோயால் கல்லிரல் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட முத்து விஜயன் அதற்கான சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று 4 மணியளவில் தீடிரென காலமானார். கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்ற முத்து விஜயனின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சமீப காலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தில் தங்கிருந்தாகவும் கூறப்படுகின்றது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஇந்த வாரம் இவரா வெளியேற போகிறார்?
அடுத்த கட்டுரைஜாம்பி திரைவிமர்சனம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here