விக்ரம் பிரபு வின் “துப்பாக்கி முனை” டீஸர் BREAKDOWN!

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில விக்ரம் பிரபு, ஹன்சிகா, நடிப்புல ஆக்க்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜனர்ல “வி கிரேயாஷன்ஸ்” தயாரித்து வெளிவர இருக்க படம்தான் “துப்பாக்கி முனை”. துப்பாக்கி முனை டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தோட விமர்சனம்தான் பார்க்க போறோம்.

டீசரோட ஆரம்பத்திலேயே ஏரியல் வியூவ்ல பீச் ரோட்ல ஒரு கார் போகரமாதிரி காட்றாங்க. லொகேஷன் பார்க்கும் போது தனுஷ்கோடி மாதிரி இருக்கு. அடுத்த சீன்ல அதே கார் வறண்ட நிலப்பரப்புல வர்ரத பாக்க முடியுது. இந்த படத்தில விக்ரம் பிரபு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கேரக்டர்ல நடிச்சிருக்காரு. டைட்டிலுக்கு ஏத்த மாதிரி விக்ரம் பிரபு துப்பாக்கி தோட்டாக்களை வைத்து “நம்ம சாப்பிடற சாப்பாட்ல நம்ம பெயர் இருக்குன்னா, என் துப்பாக்கில இருக்குற ஒவ்வொரு தோட்டலையும் குற்றவாளியோட ஜாதகமே இருக்குங்குறது என் நம்பிக்கை” யின் சொல்ற இடத்தில ஒரு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டா ஆக்க்ஷன் கொடுத்து வேறு பரிமாணத்தில விக்ரம் பிரபு இருக்காரு.

ஆரம்பத்தில நம்பிக்கையா பேசுன விக்ரம் பிரபு ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு வழக்க எடுத்து வாழ்க்கையே புரட்டி போட்டதா சொல்ற சீன்ஸ்ல “சால்ட் & பெப்பர்” லுக்ல இருக்காரு. இத வச்சி இந்த ஷாட்லருந்துதான் பிளாஷுபாக் சொல்லி கதைகுள்ள வராருன்னு சொல்லமுடிது. முக்கியமா மிர்ச்சி ஷா மற்றும் எம். எஸ். பாஸ்கரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில நடிக்கிறாங்கனு யூகிக்க முடிது. இந்த டீஸர் பார்க்கும் போது தனுஷ்கோடி & ராமேஸ்வரம் சுத்திதான் கதை நகர்ற மாதிரி இருக்கு. வேல ராம்மூர்த்தி லுக் பார்க்கும் போது அரசியல்வாதி மாதிரியும் இருக்கு, தாதா மாதிரியும் இருக்கு. இதுபோக இவருக்கு பையனா பாரத் ரெட்டி இருப்பாரோனு நம்ப முடிது. அதுமட்டுமில்லாம இந்த படத்தில, ரொம்ப நாள் கழிச்சி, ஹன்சிகா விக்ரம் பிரபுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. இதில இவங்க இதுவரைக்கும் நடிக்காத ரோல் நடிச்சிருக்குறதா சொல்லிருக்காங்க. ஆனா டீசர்ல ரொமான்ஸ் சீன்ஸ்ல விக்ரம் பிரபுவோட வந்துருக்காங்க. எந்த மாதிரி ரோல் பண்ணிருக்காங்கனு படம் பார்த்தாதான் தெரியும்.

அடுத்த சீன்ல மிர்ச்சி ஷாவை துரத்தி பிடிக்குற மாதிரி இருக்கு. முதல்ல சொன்னது போல மிர்ச்சி ஷா வழக்குலத்தான் விக்ரம் பிரபுவோட வாழ்க்கை புரட்டி போட்ட மாதிரி காட்டிருக்காங்க. அதே ஷாட்ல நிறைய துப்பாக்கி சூடு காட்சியமைச்சிருக்காங்க.அப்புறம் அமரர் ஊர்த்தில வர்ற விக்ரம் பிரபுவ கார்ல வந்து நிறைய பேர் துரத்துறமாதிரியும், அங்க ஒரு இடத்தில சண்டை நடக்குறமாதிரி இப்புடி நிறைய ஏரியல் ஷாட்ஸ்ல காட்சிப்படுத்திருக்காங்க.

அவ்ளோதான் டீஸர் முடிஞ்சிடிச்சினு பார்த்தா கடைசியா விக்ரம் பிரபு யாரையோ சுடர மாதிரி இருக்கு. அவரு யாரை சுடறாருன்னு பார்க்கும் போது கிட்டத்தட்ட மிர்ச்சி ஷான்னு சொல்லமுடியுது. கடைசியா விக்ரம் பிரபு “குட் லுக்” ன்னு சொல்லி யாரையோ சுடர மாதிரி இருக்கு. ஆகையால் விக்ரம் பிரபு ஆக்க்ஷன்ல வேற லெவெல்க்கு போய்ட்டாருனு துப்பாக்கி முனை டீஸர் பார்க்கும் போது சொல்லமுடியுது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here