உதவி பண்ணலானாலும் பரவால்ல !! உபத்திரம் பண்ணாம இருங்க !! – சாடும் ரகுல் ப்ரீத் சிங்க் ரசிகர்கள்
கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பலரும் தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளார். இந்நிலையில் மனிதம் போற்றும் வகையில் பலரும் இவ்வாறு வாடுபவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல தன்னார்வலர்கள் மட்டும் இன்றி நடிகர் நடிகைகள் பலரும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே வசிக்கும் 200 ஏழை குடும்பங்களுக்கு உதவி வந்தார். அவர் தன் குடும்பத்துடன் இணைந்து ஏழைகளுக்கு உணவு தயாரித்து விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடு தழுவிய பூட்டுதல் நீக்கப்படும் வரை இவர் இந்த உதவியை செய்வார் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் “ரகுல் ப்ரீத் சிங் இந்த லாக் டவுன் காலத்தில் என்ன வாங்கிச்செல்கிறார்..? அவர் கையில் இருப்பது மதுவா..? என்ற தலைப்புடன் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் கையில் சில பொருட்களுடன் ரகுல் ப்ரீத் சிங் சாலையை கடந்து செல்வதுபோல இருந்தது. இந்நிலையில் அந்த வீடியோவிற்கு பதில் அளித்துள்ள ரகுல் “மருந்தகத்தில் மது விற்பார்கள் என்று எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.
சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!






























