வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் !!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144  நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.

அதேபோல், நடிகர் கவினும் தனது ஹீரோயீனுக்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ கால் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் “ஹாப்பி பொறந்தநாள் பட்டி.. ஸ்பாட்ல செம ஃபோக்கஸ்டா இருந்ததால ஒரு ஃபோட்டோ கூட எடுக்கல நாங்க.. இப்போ தான் வேலையே இல்லையே.. அதான் கஷ்டப்பட்டு வீடியோ கால்ல எடுத்துட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை20 வருடங்கள் கடந்த ரவி வர்மன் என்ற கலைஞன் !
அடுத்த கட்டுரைமாஸ்டர் நடிகையின் வாக்குமூலம் !