கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “1947 ஆகஸ்ட் 16” !

A.R. Murugadoss Productions நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “1947 ஆகஸ்ட் 16” !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனும் பெயர் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக மட்டுமன்றி அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு பிரகாசமான அறிமுகத்தை உருவாக்கி, இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர் பல ஆண்டுகளாக மறக்கமுடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார், அவரது முதல் தயாரிப்பு, Fox Star Studios உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

பல்வேறு களங்களிலான உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் இயங்கும், கஜினி இயக்குனர் இப்போது Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் முயற்சியாக, மற்றொரு அற்புதமான புதிய திறமையாளரான N.S.பொன்குமார் இயக்கத்தில் “1947 ஆகஸ்ட் 16” என்ற தலைப்பில் அதிரடியான வராலாற்று படத்தை உருவாக்குகின்றனர். இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் N.S.பொன்குமார் என்பது குறிப்பிடதக்கது.

அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது.

Purple Bull Entertainment தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட் கூறுகையில்,

​​“சிறந்த கதை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அசத்தலான திறமை கொண்ட நடிகர்களுடன் கூடிய சிறந்த படத்தை உருவாக்குவதில் தமிழ் திரையுலகம் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த அற்புதமான தொழில்துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அதுவும் 1947 ஆகஸ்ட் 16 போன்ற ஒரு சிறப்பு திரைப்படத்தை உருவாக்குவது கூடுதல் சிறப்பு.”

தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்,
“‘1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்து பார்க்கும் அற்புதமான படைப்பு, இந்த கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்.”

இயக்குனர் N.S.பொன்குமார் கூறுகையில்,

“இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது”

A.R. Murugadoss Productions நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க, ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஆதித்யா ஜோஷி இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.


YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here