தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது.
பாகுபலி படத்திற்கு அடுத்ததாக இவரது ரசிகர் பட்டாளம் உலக அளவில் பறந்து விரிந்தது. தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ் திரையுலகில் அடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் இன்னும் பல வெற்றிகளை பெற்று உச்சத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.