“என்ஜாயி என் சாமி” பாடல் படைக்கும் சாதனை !!

முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்…

Read More

சிவகார்த்திகேயன் டாக்டர் படம் OTT யில் வருகிறதா ? – அதிர்ச்சி தகவல் !!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்த படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஓடிடியில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை…

Read More

தல 61 படம் குறித்த சுவாரஷிய தகவல் !! – H வினோத் அதிரடி !!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் எச் வினோத் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் பல்வேறு லொகேஷன்களில்…

Read More

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு கண்டிஷன் – தெறிக்குக் அப்டேட்!!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்…

Read More

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் தனுஷ் !!

அசுரன், கர்ணன்’ என இரண்டு படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் தனுஷிற்கான மார்க்கெட் நிலவரம் தமிழ் சினிமாவில் நன்றாகவே உயர்ந்தது. நல்ல வேளையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படி தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் உயர்ந்த தனுஷின் மார்க்கெட்டை அப்படம் நன்றாகவே பதம் பார்த்திருக்கும். ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியானாலும் அதன் தோல்வியையும், கடுமையான விமர்சனங்களையும் மறைக்க தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு…

Read More

கமல்ஹாசனுடன் இணையும் சீமான் !! – அதிர்ச்சி தகவல்

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சினிமா குறித்து இருவரும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ’கமல்ஹாசன் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உரிமையிலும், அவருடைய நூலகத்தில் வளர்ந்தவன்…

Read More

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க போகும் புதிய படம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரை தெலுங்கு சினிமாக்களில் அறிமுகம் செய்துவைக்க பல காலமாகவே முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி தற்போது நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையான சில தகவல்கள் வெளியாகி உள்ளன. காரணம் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 31 ஆவது திரைப்படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க விருக்கிறார். கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் ஜுனியர்…

Read More

கிரேசி மோகன் நினைவு நாளில் கமல் புகழாரம் !!

பிரபல நாடக, திரைப்பட நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்து தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம்…

Read More

டோவினோ தாமஸ் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் – புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் !!

தனுஷ் நடித்த ’மாரி 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மாயநதி, லூசிபர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள டொவினோ தாமஸ், கடந்த கடந்த 2014ஆம்…

Read More

நாட்படு தேறல் தேறல்….! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்….!

நாட்படு தேறல் தேறல்….! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்….! பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின் “நாட்படு தேறல்” என்ற தொகுப்பின் கீழ், 8-ஆம் பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியானது. கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் “நாட்படு தேறல்” என்ற தலைப்பின் கீழ், 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். இப்பாடல்களை 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்கள் வைத்து பாடப்பட்டு, 100 இயக்குனர்களை வைத்து இயக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.  கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கலைஞர் மற்றும் இசையருவி சேனல்களில், இத்தொகுப்பின்…

Read More