பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும்

பிராட் பிட் நடித்துள்ள “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்திய திரையரங்குகளில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகிறது !!! மூன்று வெற்றிகரமான திரைப்பட பிரீமியர்கள் மற்றும் ஸ்கர்ட்டுடன் பிராட் பிட் தோன்றிய புகழ்பெற்ற சிவப்பு கம்பள தோற்றத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இன்னும் ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி – நகைச்சுவை கலந்த திரைப்படமான “புல்லட் டிரெய்ன்” திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு…

Read More

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு ‘யாமா’ படக்குழு வாழ்த்து

நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், லட்சுமி பிரியா சந்திரமெளலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ‘யாமா’ திரைப்பட குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ‘யாமா’ படக்குழு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தனது மாறுபட்ட நடிப்பாலும், அழுத்தமான கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய…

Read More

கமல் ஹாசன் தயாரிப்பில் உதயநிதி

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.        

Read More

வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை…

Read More

காவிய காதலைச் சொல்லும் ‘சீதா ராமம்

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும் காதலை மையப்படுத்திய திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது- இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சீதா ராமம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும்…

Read More

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது….

Read More

ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் – ல் நடைபெற்றது. அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது. ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு…

Read More

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக ‘லக்’ எனும் இந்தி…

Read More

எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த…

Read More

எண்ணித் துணிக திரைப்பட இசை வெளியீடு !!

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல…

Read More