தயாரிப்பாளர் டாக்டர் G. தனஞ்ஜெயன் அவர்களின் மகள் ரேவதி- அபிஷேக் திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார். G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில்…

Read More

‘எல்லாம் ஓகே வா! ஓநாய் திரைப்படத்தில் இருந்து உற்சாகமிக்க பாடல் வெளியீடு

‘எல்லாம் ஓகே வா!’: மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து உற்சாகமிக்க பாடல் வெளியீடு பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது OkVaமேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து…

Read More

NC22 ப்ரீ லுக்: நாக சைதன்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டல்

இயக்குநர் வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘NC22’-ல் அக்கினேனி நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி இந்தக் கதையில் கதாநாயகியாக நடிக்கிறார். பைலிங்குவல் கதையாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேப்டன் கூல்’ இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர்…

Read More

சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை காத்தவராயன்..’ எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ”பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..’ என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர்…

Read More

என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன் ; சசிகுமார் திட்டவட்ட அறிவிப்பு

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி…

Read More

பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியீடு

இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் ‘ஹனு-மேன்’ எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட ‘ஹனு-மேன்’ படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக…

Read More

அட்லீ, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ஷிவ் பண்டிட் மற்றும் பலர் ​​’வதந்தி – தி ஃபேல் ஆஃப் வேலோனி’க்காக தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள்

இன்று முன்னதாக, பிரைம் வீடியோ அவர்களின் சமீபத்திய தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதாந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் தேதியை அறிவித்தது, இது டிசம்பர் 2 ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையேயும், தொழில்துறையினரிடையேயும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தால், இந்தத் தொடர் சேவையில் திரையிடப்படும்போது என்ன நடக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. படைப்பாற்றல் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரியின் எட்ஜ்-ஆஃப்-யுவர் சீட் த்ரில்லர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி…

Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது !

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன் ,…

Read More

புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா

2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும்…

Read More

வாத்தியார் ஆரூர் தாஸ் மறைந்தார்

தமிழ் திரையின் மாபெரும் உரையாடல் ஆசிரியர் #ஆரூர்தாஸ் மறைந்தார் என்பதை அறிந்து வருந்துகிறேன். ஏறக்குறைய 1000 படங்கள்… இந்திய சினிமாவின் 100 வருட வரலாற்றில் இவர் பணியாற்றியது 60 ஆண்டுகள்… திரை உலக ஜாம்பவான் இவர் என்றால் யாரும் மறுக்க முடியாது. மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி , முதல் நடிகர் மோகன் , பூர்ணிமா வரை இவர் வசனத்தைப் பேசாத நடிகர்…

Read More