தமிழரசன் திரைப்படம் ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழரசன் திரைப்படம் மகனை…

Read More

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர்…

Read More

இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான் 31

‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், ‘ஜவான்’ பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் பரபரப்பான… பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந்தாலும் மாதந்தோறும் #AskSRK என்ற பிரத்யேகமான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். இதன் போது அவர் வெளிப்படுத்தும்…

Read More

விஜய் படத்தில் அருள்நிதியுடன் இணையும் சௌந்தரராஜா

பிகில், பத்து தல போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா, இதற்கு முன்பு போகன், பூமி போன்ற படங்களில் பணியாற்றிய விஜய் இயக்கும் அருள்நிதியின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார். சௌந்தரராஜா கூறுகையில், “எனது கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும், ஏற்கனவே படத்தின் 80 சதவீதத்திற்கும் மேல் படமாக்கிவிட்டேன். பட்ஜெட் மற்றும் தயாரிப்பின் அடிப்படையில் அருள்நிதியின் கேரியரில் இது மிகப்பெரிய படமாக இருக்கும். முக்கிய பகுதிகள் படம் கேரளா மற்றும் இடுக்கியில் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டர் தீவிரமானதாக இருக்கும்,…

Read More

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான ‘எனக்கு வேண்டாம். நமக்கு வேண்டாம்’ எனும் விழிப்புணர்வு வாசகத்தை கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து முழங்கினர். மேலும் போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை…

Read More

“தருணம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !!

ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், “தேஜாவு” படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் பூஜை மிகச் சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான…

Read More

ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

”எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார். குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர். ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை…

Read More

நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால்…

Read More

அஞ்சலி நடிக்கும் “ஈகை” படத்தின் துவக்க விழா

இயக்குனர் இமையம் பாரதிராஜா , புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் , அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு , கிருஷ்ண சந்தர் , காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி முன்னிலையில் துவங்கப்பட்டது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி…

Read More

பாயும் ஒளி நீ எனக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு கதை கதையின் நாயகன் விக்ரம் பிரபு- விற்கு சிறு வயதில் நடந்த விபத்தால் கண்ணில் அடிபட்டு , கண்ணில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையுடனே நாயகன் பயணிக்கிறார். அப்போது ஒருநாள் இவரின் தந்தையை சில இவர் முன்னாலேயே கொலை செய்துவிடுகின்றனர். தந்தையின் கொலைக்கு பழி வாங்க துடிக்கும் கதையின் நாயகன், தன் இந்த கண் பிரச்சனையை வைத்துக்கொண்டு. அந்த கொலைக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து தனது பழியை தீர்த்துக்கொண்டாரா ? இல்லையா?…

Read More