7G கதை
கதையின் நாயகன் ராஜீவ், மற்றும் கதையின் நாயகி வர்ஷா இருவரும் ஐடி-யில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து EMI-இல் ஒரு வீடுவாங்குகிறார்கள், அப்படி இவர்கள் வாங்கும் வீட்டின் எண் தான் 7G.
வீடு வாங்கிய சந்தோஷத்தை கொண்டாட நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார்கள், பார்ட்டிக்கு வந்த நிஷா என்ற பெண்ணுக்கு ராஜிவ் மேல் ஆசை இருக்கிறது. ராஜீவை அடைய அவரின் வீட்டில் சூனிய பொம்மை வைத்து செல்கிறார். பிறகு, அந்த வீட்டில் எல்லாமே அமானுஷியாமாக நடக்கிறது. கதையின் நாயகி வர்ஷாவும், அவரின் குழந்தையும் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். கடைசியில் இவர்கள் இந்த பிரச்னையிலிருந்து வெளியே வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார்.
Kalki 2898 AD Tamil Movie Review – Click Here