Madame Web Movie Review !!

Madame Web கதை

ஆங்கிலம் தமிழ் மற்றும் ஹிந்தி
திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம்
இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson
ஒளிப்பதிவு – Mauro Fiore இசை –Johan Soderqvist
Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது!
ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது !
Cassandra Webb (Dakota Johnson) -அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறன் அவருள் உருவாகிறது!
Julia Cornwall (Sydney Sweeney), Mattie Franklin (Celeste O’ Connor) and Anya Corazon (Isabela Merced) – ஆகிய மூன்று பெண்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை Cassandra Webb – ற்கு ஏற்படுகிறது!
எதிர்காலத்தில் முக்கிய பணிகளை செயல் படுத்த வேண்டிய பொறுப்பினை தத்தம் தோள்களில் சுமந்துள்ள அவர்களை அழிந்திட Ezekiel Sims (Tahar Rahim) என்பவன், அவர்களை தேடி அலைகிறான்!
கறுப்பு நிற Spider -Man உடையணிந்த அவனுக்கும் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிகின்ற சக்தி உண்டு !
Cassandra, Ezekiel Sims இடமிருந்து அம்மூன்று பெண்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்!
தன கடமையை அவரால் வெற்றிகரமாக செயல் படுத்த இயன்றதா என்பதுதான் படத்தின் உச்சக்கட்டம்.
Sony Pictures இன் இப்படத்தை திரையில் United9 நிறுவனம் வழங்கியுள்ளது .

படத்தில் சிறப்பானவை
படத்தின் ஒளிப்பதிவு
பின்னணி இசை
கதாபாத்திரங்களின் நடிப்பு
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்

படத்தில் கடுப்பானவை
பலவீனமான வில்லன் கதாபாத்திரம்
மேலும் மெருகேற்ற படாத திரைக்கதை

Rating : ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் 28 மார்ச், 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!
அடுத்த கட்டுரைரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!