டீன்ஸ் கதை
13 சிறுவர்கள் ஒரே காலனியில் வசிக்கிறார்கள், இவர்களில் ஒரு சிறுமி, தன் பாட்டி ஊரில் உள்ள ஒரு கிணத்தில் பேய் இருப்பதாக சொல்கிறார். இதனை கேட்டவுடன் மற்ற சிறுவர்களுக்கு அங்கு சென்று பேய் இருக்கிறதா? இல்லையா?, என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இவர்கள் ஞாயிறு அன்று திட்டம் போட்டு, திங்கள் கிழமை போலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
Read Also: Indian 2 Movie Review
திங்கள் கிழமை இவர்கள் 13 பேரும் பள்ளியை கட் அடித்துவிட்டு, அந்த சிறுமி சொன்ன ஊருக்கு செல்கின்றனர், அங்கு சென்ற பிறகு அமானுஷியமான சில விஷயங்கள் நடக்கிறது, பிறகு இவர்களில் சிலர் திடீரென்று காணாமல் போகின்றனர், இவர்கள் காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பதும் இதில் பார்த்திபன் என்னவாக வருகிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பார்த்திபன் அவருக்கே உண்டான பாணியில் வித்யாசமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡13 சிறுவர்களின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡விறுவிறுப்பான இரண்டாம்பாதி
படத்தில் கடுப்பானவை
➡குழப்பமான முதல்பாதி
ரேட்டிங்: (2.75 / 5)