அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌ அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைககனாச்சாரி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைடாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு