சட்னி சாம்பார் கதை
ரத்னசாமி என்பவர் ஊட்டியில் தனது மனைவி, மகன், மகளுடன் சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இவர் அமுதா கஃபே என்று ஒரு ஹோட்டல் நடத்துகிறார், இந்த ஹோட்டலில் சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும் ஊட்டிக்கு வருபவர்கள், இந்த ஹோட்டலில் சாப்பிடாமல் செல்லமாட்டார்கள், அந்த அளவிற்கு ஃபேமஸ் ஆன ஹோட்டல் தான் இந்த அமுதா கஃபே.
Read Also: Raayan Tamil Movie Review
ரத்னசாமி- க்கு உடம்பு சரியில்லாமல் போகிறது, பிறகு இவருக்கு கேன்சர் இருப்பதும் தெரியவருகிறது. கேன்சர் தீவிரத்தால் இவர் 3 மாதம் படுத்தபடியே இருக்கிறார், அப்போது ரத்னசாமி தன் மகனை ( கார்த்திக் ) கூப்பிட்டு, பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் தனக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக சொல்கிறார், அந்த பெண் மூலம் தனக்கு ஒரு மகன் பிறந்ததே சமீபத்தில் தான் தெரியும் என்றும், தான் சாவதற்குள் அந்த மகனை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார். கார்த்திக் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராதாமோகன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிரிக்கவைக்கும் சில எதார்த்த காமெடிகள்
கடுப்பானவை
➡நம்மை வெறுப்பதும் சில காமெடிகள்