ராயன் கதை
கதையின் ஆரம்பத்தில் காத்தவராயன் ( ராயன் ) , முத்துவேல் ராயன், மாணிக்கவேல் ராயன் மூவரும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து ஒரு தங்கை பிறக்கிறாள், ராயனுக்கு தங்கை மேல் அதிக பாசம், ராயன் தன் தங்கைக்கு துர்கா என பெயர் வைக்கிறார். ஒருநாள் வெளியில் சென்ற அப்பா அம்மா இருவரும் வராமல் போகிறார்கள். சில காரணங்களால் ராயன் தன் தம்பிகள், தங்கையை கூட்டிக்கொண்டு ஒரு லாரியில் தப்பிச்செல்கிறான்.
சென்னைக்கு வரும் ராயன், சேகர் என்பவரிடம் வேலை செய்து, தன் தம்பிகள், தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்கிறான், ஒரு அப்பா போல் இருந்து இவர்கள் மூவரையும் வளர்கிறான். பிறகு இவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது, கடைசியில் இவர்கள் அந்த பிரச்னையை சமாளித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார், இந்த திரைப்படம் இவரின் 50-வது திரைப்படமாகும்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡துஷாராவின் வித்யாசமான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡காலகாலமாக கண்ட கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (3 / 5)