வாஸ்கோடகாமா கதை
நம் வாழ்க்கையில் பல காலகட்டங்கள் இருக்கிறது. தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டம் கலியுகம் ஆகும். இந்த கலியுகத்தில் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால் கதையின் நாயகன் வாசுதேவன் மட்டும் மிகவும் நல்லவனாக இருக்கிறான். இவன் இப்படி நல்லவனாக இருப்பதால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது, அந்த பிரச்சனையால் நாயகனின் அண்ணன் இறந்து விடுகிறார்.
Read Also: Jama Tamil Movie Review
வாசு தன் சித்தப்பாவை பார்க்க வேறொரு ஊருக்கு போகிறார். அங்கு உள்ள மக்கள் அநியாயத்திற்கும் அநியாயம் செய்கிறார்கள். அப்போது வாசுவின் சித்தப்பா நீ இங்கு வாழவேண்டும் என்றால் கெட்டவனாக வேண்டும் அல்லது கெட்டவனாக நடிக்க வேண்டும் என்கிறார். அதேபோல் இவனும் கெட்டவனாக நடிக்கிறான். அங்கு ஒரு பெண்ணை பார்த்து காதலிக்கிறான், காதல் திருமணம் வரை செல்கிறது. அப்போது வாசு நல்லவன் என்று தெரிந்துவிடுகிறது. இதற்கடுத்து என்னாயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் RGK இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡நகுலின் நடிப்பு
➡ஆனந்த் ராஜின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡அனைவருக்கும் பொருந்தாத கதைக்களம்
ரேட்டிங்: (2.5/ 5)