பேச்சி கதை
கொல்லிமலையில் அரண்மனைக்காடு என்று ஒரு இடம் உள்ளது. அங்கு வரும் ஒரு காதல் ஜோடி ஒரு அமானுஷிய சக்தியால் இறந்துபோகின்றனர். பிறகு கதையின் நாயகி மீனா அவரின் நண்பர்களுடன் இந்த அரண்மனைக்காடை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
Read Also: VascoDaGama Tamil Movie Review
மீனா மற்றும் அவர்களின் நண்பர்களை பத்திரமாக அழைத்துச்சென்று கூட்டிவர, மாரி என்பவர் வருகிறார். மாரியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் மலை ஏறுகின்றனர். மாரி சொல்வதை கேட்காமல் அவர்களின் இஷ்டத்திற்கு செய்கிறார்கள். பிறகு அங்கு அமானுஷியமான விஷயங்கள் நடக்கிறது கடைசியில் இவர்கள் 6 பேரும் பத்திரமாக வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡காலகாலமாக கண்ட கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (2.75 / 5)