தங்கலான் கதை
1850 பெங்களூரில், வேப்பூர் கிரமம் ஒன்று உள்ளது அந்த கிராமத்தில் கதையின் நாயகன் தங்கலான் முனி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார். அந்த ஊரில் உள்ள மிராசு, அங்கு உள்ள மக்களின் இடத்தை பிடிங்கி அவருக்கு அடிமையாக வைத்திருக்கிறார். அதே மாதிரி, தங்கலான் முனியின் இடத்தை பிடிங்கி அவரின் குடும்பத்தையே அடிமையாக வைக்கிறார் மிராசு.
வெள்ளைக்கார துரையான கிளமெண்ட் என்பவர் தங்கத்தை தேடி வருகிறார். இவருக்கு தங்கத்தை தேடவும் அதனை வெட்டி எடுக்கவும் ஆள் தேவைப்படுகிறது. அதற்காக யாரை அழைத்தாலும் யாரும் வரவில்லை. தங்கலான் மட்டும் மிராசுவிடம் அடிமையாக இருப்பதற்கு பதில், வெள்ளைக்காரனிடம் வேலை செய்து, மிராசுவின் கடனை அடைத்து தன் இடத்தை மீட்கலாம் என முடிவெடுத்து. சிலரை அழைத்துக்கொண்டு தங்கத்தை தேடி செல்கிறான், இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள், அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡விக்ரமின் வித்யாசமான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡CG காட்சிகள்
ரேட்டிங்: (3.5 / 5)