வேதா கதை
பாத்மார்க் என்கிற கிராமத்தில் ஜிதேந்திர பிரதாப் சிங் தலைவராக உள்ளார். அந்த ஊரில் ஒதுக்கப்பட்ட மக்கள் மேல்தட்டு மக்களிடம் பேசவோ, பழகவோ கூடாது என்ற விஷயம் உள்ளது. அதையும் மீறி யாராவது காதலித்து திருமணம் செய்தால் அவர்களை கொலை செய்துவிடுவார்கள்.
Read Also: Raghu Thatha Tamil Movie Review
அந்த ஊரில் வேதா என்கிற பெண் பாக்சிங் இல் ஆர்வமாக இருக்கிறார். அங்கு உள்ள தலைவரின் தம்பி வேதாவை பாக்சிங் இல் அடுத்தபடிக்கு செல்லவிடாமல் தடுக்கிறார். கதையின் நாயகன் அபிமன்யூ, மிலிட்டரியில் இருந்து சில காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பாத்மார்க் ஊருக்கு பாக்சிங் கோச் ஆக வருகிறார். வேதாவிற்கும், அவரின் குடும்பத்திற்கும் நடக்கூடிய அநீதியை பார்த்து உதவி செய்ய நினைக்கிறார். இதற்கடுத்து அபிமன்யூ என்னவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த கதையினை இயக்குனர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஜான் ஆப்ரகாம் & ஷர்வாரி நடிப்பு
➡பின்னணி இசை
➡தமிழ் டப்பிங்
➡தரமான முதல்பாதி
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம் பாதி கதைக்களம்
➡நம்பமுடியாத ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: (2.75 / 5)