வாழை கதை
1999 -இல் புளியங்குளத்தில் சிவனேந்தன் என்கிற சிறுவன் இருக்கிறான். இவன் பள்ளியில் நன்றாக படிக்கிறான், சிவனேந்தன் அப்பா இறந்துபோனதால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால் சிவனேந்தன் அவனின் அம்மா மற்றும் அக்காவுடன் சேர்ந்து வாழை தார் தூக்கும் வேலைக்கு செல்கிறான்.
Read Also: Pogumidam Vegu Thooramillai Tamil Movie Review
சிவனேந்தனுக்கு இந்த வேலைக்கு செல்ல விருப்பமில்லை, இதனால் ஒருக்கட்டத்தில் வேலைக்கு போகாமல் இருக்கிறான். அப்போது பள்ளி ஆண்டுவிழாவிற்கு நடன பயிற்சிக்காக பள்ளிக்கு செல்கிறான் சிவனேந்தன், அப்போது வாழை தார் ஏற்ற சென்றவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. இதற்கடுத்து சிவனேந்தன் வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த வாழை திரைப்படம், இயக்குனர் மாரி செல்வராஜ் அவரின் வாழ்க்கையில் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து மிக சிறப்பாக எடுத்துள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சிவனேந்தன் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡வசனம்
➡கிளைமேக்ஸ்
➡கண் கலங்க வைக்கும் சில காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡எதுவும் இல்லை
ரேட்டிங்: (3.75 / 5)