கொட்டேஷன் கேங் கதை
மும்பையில் கூலிக்கு கொலை செய்யகூடிய பல குழுக்கள் உள்ளது, அந்த குழுக்களின் பெயர்தான் கொட்டேஷன் கேங். அதில் இருக்கும் ஒரு குழுவின் பெயர்தான் முஸ்தபா கேங், இவரிடம் சிலர் வேலை செய்கிறார்கள் அதில் ஒருவர்தான் சகுந்தலா, சகுந்தலா மிகவும் நம்பிக்கையான ஆள். முஸ்தபா கேங்குக்கும், இவர்களை போல் உள்ள ருத்ரன் கேங்குக்கும் சண்டை நடக்க ஆரம்பிக்கிறது. அப்போது ருத்ரனை கொல்ல சகுந்தலா முன் வருகிறார், தான் சொன்னதுபோலவே ருத்ரனை கொலையும் செய்கிறார்.
Read Also: Surya’s Saturday Tamil Movie Review
ஒருநாள் முஸ்தபா, சகுந்தலாவையும், வளர்ப்பு மகளையும் இன்னும் சிலரையும் விருந்துக்கு அழைத்து கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது சகுந்தலா தப்பித்து செல்கிறார். கடைசியில் முஸ்தபா, சகுந்தலாவை எதற்கு கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதும். சகுந்தலா, முஸ்தபாவை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் விவேக் குமார் கண்ணன் ரத்தம் தெறிக்க தெறிக்க இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡அதிகப்படியான ரத்தக்காட்சிகள்
➡அதிகப்படியான போதைப்பொருள் காட்சிகள்
➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (2.75 / 5)