ஏ ஆர் எம் கதை
கதையின் ஆரம்பத்தில் விண்ணிலிருந்து ஒரு விண்கல் சியோதிகா என்ற கிராமத்தில் விழுகிறது. அந்த விண்கல்லை அங்கிருந்த மன்னன் எடுத்துச்சென்று பஞ்சபூதங்களை அடக்கக்கூடிய ஒரு விளக்கு செய்கிறார். ஒருவருக்கு கொடுத்த வாக்கினால் அந்த விளக்கு மீண்டும் சியோதிகா கிராமத்திற்கு வருகிறது.
சியோதிகாவில் மணியன் என்று ஒரு திருடன் இருக்கிறான். ஒருநாள் இவன் கோவிலில் உள்ள அந்த விளக்கை திருடிச்செல்லும் போது பிடிபட்டு இறந்துவிடுகிறான். இதனால் அவனின் வம்சத்தை அந்த ஊர் மக்கள் திருட்டு குடும்பம் என திருட்டுப்பட்டம் கட்டிவிடுகின்றனர். மணியனின் பேரன் அஜயன் இந்த திருட்டு பழியினால் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். கடைசியில் அஜயன் இந்த பழியை தீர்த்தனா? இல்லையா? என்பதும் அந்த விளக்கை சுற்றி நடக்கும் சில மர்மமான விஷயங்களுமே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை சுஜித் நம்பியார் எழுத ஜிதின் லால் இயக்கியுள்ளார்.
இந்த ஏ ஆர் எம் திரைப்படம் நடிகர் டொவினோ தாமஸின் 50 -வது திரைப்படமாகும்.
படத்தில் சிறப்பானவை
➡டொவினோ தாமஸின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
➡தமிழ் டப்பிங்
படத்தில் கடுப்பானவை
➡சுற்றி வளைக்கும் திரைக்கதை
➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (2 .75 / 5)