வேட்டையன் கதை
கதையின் நாயகன் SP அதியன், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார். இதனால் அவரை காவல்துறையில் வேட்டையன் என அழைக்கிறார்கள். நாயகன் அதியனுக்கு கன்னியாகுமரியிலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் ஆசிரியை சரண்யா தான் பணியாற்றும் அரசாங்க பள்ளியில், போதை பொருட்கள் அதிகம் புழங்குவதாக குறிப்பிடுகிறார். அதியன் அதற்கான நடவடிக்கையும் எடுக்கிறார்.
சென்னையில் வந்து பணியாற்றும் சரண்யாவை, பள்ளிக்கே வந்து மர்மமான நபர் கொடூரமாக கொலை செய்கிறார், கொலை செய்தவனை கண்டுபிடித்து என்கவுன்ட்டர் செய்கிறார். ஆனால் தவறான நபரை என்கவுன்ட்டர் செய்தது பிறகுதான் தெரியவருகிறது. பிறகு அதியன் சரியான நபரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் சரண்யாவை கொலை செய்த காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் T.J .ஞானவேல் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡ரஜினிகாந்த் & அமிதாப் பச்சன் நடிப்பு
➡வசனம்
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡ஜன கண மன படத்தின் சாயல்
➡மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3 / 5)