ஆலன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆலன் கதை

கதையின் நாயகன் தியாகு சிறுவயதில் தன் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று வரும் போது விபத்து ஏற்பட்டு, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இறந்துபோகிறார்கள். பிறகு தியாகுவின் மாமா தியாகுவை ஒரு மேன்ஷனில் விட்டுவிட்டு செல்கிறார். பிறகு அங்கிருந்து தப்பித்த தியாகு காசிக்கு செல்கிறான். தியாகு காசியில் சாமியாராக இருக்கிறார், அப்போது ஒரு சாமியார் உன் மனது நிலையாக இல்லை உனக்கு எது தேவையோ அதை தேடி செல் என்கிறார், தியாகுவும் அங்கிருந்து கிளம்புகிறார்.

Read Also: Aaryamala Tamil Movie Review

ஜெர்மனியை சேர்ந்த ஜனனி தமிழ் மீது உள்ள ஈர்ப்பால், தமிழ் மொழியை பற்றிய ஆவணப்படம் எடுக்க இந்தியா வருகிறார். தியாகுவும் ஜனனியும் எதார்த்தமாக சந்திக்கிறார்கள், பிறகு காதலிக்கிறார்கள். தியாகு நன்றாக எழுதுவார் என்பதனால், ஜனனி தியாகுவை புத்தகம் எழுத சொல்லிவிட்டு ஜெர்மனி செல்கிறார். ஜெர்மனி சென்ற ஜனனி திரும்பி வந்தாரா? இல்லையா? என்பதும் தியாகு அந்த புத்தகத்தை எழுதி முடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்களம்
➡வெற்றியின் நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ஃப்ளாஷ்பேக் காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் திரைக்கதை
➡படத்தை நம்முடன் இணைக்காத சில காட்சிகள்

ரேட்டிங்: (2 .75 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆர்யமாலா தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைநடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!