சேவகர் கதை
கதையின் நாயகன் விஜய் சமூக ஆர்வலராக இருக்கிறார், தான் மக்களுக்கு எப்போதும் சேவை செய்யும் சேவகனாக இருக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை, இதனாலேயே தன்னால் முடிந்ததை மக்களுக்கு எப்போதும் செய்கிறார். இவருக்கு ஒரு முறை பெண்ணும் உள்ளது. அந்த முறை பெண்ணும் இவரையே சுற்றி வருகிறார்.
Read Also: Deepavali Bonus Tamil Movie Review
விஜய் இப்படி நல்லது செய்து, மக்கள் மனதில் இடம்பிடிப்பது, ஒருசில அரசியல்வாதிகளுக்கும் போலீசுக்கும் பிடிக்காமல் போகிறது. இதனால் கோபமடைந்த அமைச்சர், விஜய்யை தீர்த்துக்கட்டும்படி போலீசிடம் சொல்கிறார். SI தாஸ், விஜய் குடும்பத்திடம் பிரச்சனை செய்கிறார் இதனால் கோபமடைந்த விஜய், SI தாஸை அடிக்கும்போது இறந்துவிடுகிறார், இதனால் விஜய் போலீசாரால் தேடப்படுகிறார், கடைசியில் இந்த பிரச்சனையிலிருந்து இவர் வெளியே வந்தாரா? இல்லையா? என்பதும் விஜய்யின் காதல் என்னானது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார்.