பிரதர் கதை
கதையின் நாயகன் கார்த்தி சிறுவயதிலிருந்தே குறும்புக்காரனாக இருக்கிறார். தனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதையேதான் பேசுவார், இதனாலேயே இவரை வக்கீலுக்கு படிக்கவைக்கிறார். கார்த்தி கேட்கும் பல கேள்விகளால் பல பிரச்சனைகள் ஏற்படும். கார்த்தியால் அவரது அப்பா மிகவும் மனவுளைச்சலாகிறார். இப்படி கார்த்தி செய்த ஒரு பிரச்னையால் அவருக்கு BP அதிகமாகி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
அப்பாவை பார்க்க அக்கா ஆனந்தி ஊட்டியிலிருந்து, சென்னை வருகிறார். தம்பியை ஊட்டிக்கு அழைத்துச்சென்று மாற்றிக்காட்டுவதாக சொல்லி ஊட்டிக்கு அழைத்துச்செல்கிறார். ஊட்டியில் அக்காவின் குடும்பத்தினர் டைம் டேபிளை பின்பற்றி வாழ்பவர்கள். இப்படி ஒரு ஆள் அந்த குடும்பத்திற்குள் சென்றதும் என்னென்ன பிரச்னைகள் வந்தது, அதனை கார்த்தி எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஜெயம் ரவியின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் பின்னணி இசை
➡அக்கா தம்பி பாசம்
படத்தில் கடுப்பானவை
➡காலகாலமாக கண்ட கதைக்களம்
➡ ஒருசில சில காமெடிகள்
ரேட்டிங்: ( 2 .75 / 5 )