நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் விமர்சனம்
நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா, இவர் சிறுவயதில் பெரிதாக படங்கள் கூடபார்த்ததில்லை இவருக்கு, தான் சினிமாவிற்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, இயக்குனர் சத்யன் இயக்கும் படத்திற்கு புதுமுக நடிகை தேவைப்பட்டதால் அந்த தேடலில் அவர் டயானாவை சந்திக்கிறார், ஆரம்பத்தில் மறுத்த அவர்கள், பிறகு படத்தில் நடிக்க ஒற்றுக்கொண்டு நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் சத்யன் டயானாவை நயன்தாராவாக மாற்றுகிறார்.
ஒருசில படங்களில் மலையாளத்தில் நடித்த நயன்தாரா பிறகு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். எதிர்பாராத விதமாக சினிமாவிற்குள் நுழைந்த நயன்தாரா பல சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதே இந்த நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தின் மீதி கதையாகும்…
இதில் இவரின் காதல், திருமணம், குழைந்தைகள் என அணைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது.
இந்த நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படம் தற்போது Netflix OTT தளத்தில்வெளியாகியுள்ளது.