இயங்குனர் ஷங்கர் கோலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் என அனைவராலும் பட்டம் சூட்டப்பட்டவர். இவர் கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை இயக்கி, நடிகர்களுக்கும் சரி, சினிமா ரசிகர்களுக்கும் சரி , புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார். இவர் இயக்கத்தில் ஜென்டில் மேன் முதல் இந்தியன் 2 வரை… பல பிரமாண்ட படங்களை இயக்கி பல சரித்திரங்கள் படைத்துள்ளார். இந்த வரிசையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படமாக டோலிவுட்டின் முன்னணி நடிகரான, குளோபல் ஸ்டார் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கேம் சேஞ்சர் திரைப்படம், இன்னும் 30 நாட்களில் பான் இந்தியா ( Pan India ) திரைப்படமாக வெளியாகவுள்ளது.10 -ஜனவரி- 2025 அன்று ஆண்டின் ஆரம்பத்திலேயே பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக வருவதால், கேம் சேஞ்சரின் ஆட்டம் சற்று அதிகமாகவே இருக்கும் என்பது தெளிவாகவே தெரிகிறது.
கேம் சேஞ்சர் திரைப்படத்திலிருந்து வெளியான ரா மச்சா மச்சா ரா என்ற பாடலுக்கு மக்கள் அனைவரும் ரீல்ஸ் செய்து அந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியான லைரானா என்ற பாடல் அழகான ஒரு காதல் பாடலாக இருக்கிறது, கேம் சேஞ்சரிலிருந்து வெளியான டீசர் நம்மால் கணிக்கமுடியாத கதைக்களமாக உள்ளது, சண்டைக்காட்சிகள் தரமானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. காட்சிகள் அனைத்தும் மிக பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் உள்ளது. இவையெல்லம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
இந்த பிரமாண்ட படத்தினை தயாரிப்பாளர்கள் தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்கள்.
கதையின் நாயகனாக குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஞ்சலி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், தமனின் துள்ளல் இசையில் உருவாகியுள்ள இந்த கேம் சேஞ்சர்’ திரைப்படம் 10 – 01 -2025 ல் திரையரங்கில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.