விடுதலை பாகம் – 2 கதை
விடுதலை பாகம் 1 -ல் கதை எங்கு முடிந்ததோ அங்கிருந்து விடுதலை பாகம் – 2 தொடங்குகிறது.
கதையின் ஆரம்பத்தில் சில காரணங்களால் வாத்தியாரை, வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள் அப்போது வாத்தியார் தான் யார்?, தான் இப்படி மாறியதற்கான காரணம் என்ன போன்றவற்றை சொல்கிறார்.
பெருமாள், வாத்தியாராக வேலை செய்யும்போது அங்கு கருப்பன் என்ற பையன் அங்கு உள்ள பண்ணையாரை கொன்றுவிடுகிறான். அப்போது அவனுக்கு வாத்தியார் அடைக்கலம் கொடுக்க அவர் கண் முன்னே, கருப்பனை பண்ணையாரின் மகன் கொள்கிறான், அங்கு வாத்தியாரின் வாழ்க்கை மாறுகிறது. இதற்கடுத்து வாத்தியாரின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡திரைக்கதை
➡படம் உருவாக்கப்பட்ட விதம்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
ரேட்டிங்: ( 3.5 / 5 )