மத கஜ ராஜா கதை
கதையின் ஆரம்பத்தில் ஒருசிலரிடமிருந்து தீக்குச்சி திருமுகம் என்பவரை காப்பாற்றுகிறார் கதையின் நாயகன் மத கஜ ராஜா, அப்போது அவரின் மகளான மாதவியை பார்க்கிறார் ராஜா, இருவருக்கும் பிடித்துவிட சொல்லாமல் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அப்போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் மாதவி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார், மாதவி எங்கு சென்றார் எங்கு உள்ளார் என தெரியாமல் ராஜா மாதவியை தேடுகிறார்.
Read Also: Game Changer Tamil Movie Review
ஒரு திருமணத்திற்காக ராஜாவும் அவரின் நண்பர்களும் சந்திக்கின்றனர், அப்போது பிரிவதாக இருந்த தன் நண்பனையும் மனைவியையும் சேர்த்துவைக்கிறார் ராஜா, அதன்பிறகு மற்ற இரண்டு நண்பர்களுக்கு மிக பெரிய பிரச்சனை இருப்பதும். அந்த இரண்டு பிரச்னைக்கும் கற்குவேல் விஸ்வநாத் என்பவன்தான் காரணம் என தெரியவருகிறது. ராஜா நண்பர்களுக்காக அவனை எதிர்க்க முடிவெடுக்கிறான், அதன்பிறகு அவன் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதும், கடைசியில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சுந்தர்.சி மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சந்தானத்தின் காமெடி
➡விஷால் நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡மனோபாலா காமெடி
➡சுந்தர்.C இயக்கம்
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡முகம் சுழிக்கவைக்கும் ஒருசில காட்சிகள்
➡டபுள் மீனிங் காமெடிகள்
ரேட்டிங்: ( 3. 25 / 5 )