Mr. ஹவுஸ் கீப்பிங் கதை
கதையின் நாயகன் ஹானஸ்ட் கல்லூரியில் படிக்கும்போது, இசை என்ற பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறான், ஆனால் கடைசி வரை ஹானஸ்ட்- ன் காதலை இசை ஏற்றுக்கொள்ளாமலேயே இருக்கிறாள். கல்லூரியின் கடைசி நாளன்று அனைவரின் முன்னிலையிலும், தான் இசையை விட அழகான பெண்ணை காதலித்து கரம் பிடிப்பேன், அல்லது இசையின் வீட்டிற்கு வேலைக்காரனாக செல்வேன் என்று சபதம் எடுக்கிறான்.
Read Also: Kudumbasthan Tamil Movie Review
ஹானஸ்ட் கல்லூரி முடிந்த பிறகு ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த பெண்ணுக்கும் இவனுக்கு ஒத்துப்போகவில்லை. ஒரு கட்டத்தில் ஹானஸ்ட்டுக்கு பணம் தேவைபடுகிறது, அதனால் இசையின் வீட்டிற்கு வீட்டுவேலைக்கு செல்கிறான். இதன்பிறகு இவர்கள் இருவருக்குள்ளும் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை & பாடல்கள்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡ஒருசில காமெடிகள்
➡விறுவிறுப்பான முதல்பாதி கதைக்களம்
படத்தில் கடுப்பானவை
➡கணிக்கும்படியான அடுத்தடுத்த காட்சிகள்
ரேட்டிங்: ( 2.75 / 5 )