வல்லான் கதை
கதையின் ஆரம்பத்தில் மதபோதகர் ஆரோக்கிய ராஜ் என்பவரின் மருமகனும், RR Groups ன் CEO வான ஜோயல் என்பவர் அவரின் Guest House ல் கொடூரமான முறையில் இறந்துகிடக்கிறார். இந்த கொலையை செய்தது யார்? என போலீசார் முழு தேடுதலில் இருக்கிறார்கள், ஆனாலும் இறந்தது பெரிய இடத்து நபர் என்பதால் போலீஸ் இந்த கேஸை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.
Read Also: Kudumbasthan Tamil Movie Review
இந்த கேஸை சீக்கிரம் முடிப்பதற்காக, தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள கதையின் நாயகன் திவாகரை தனிப்பட்ட முறையில் நியமிக்கிறார் உயர் காவல் அதிகாரி. திவாகர் இந்த கேஸை பற்றி விசாரிக்கும்போது பல விஷயங்கள் கிடைக்கின்றன மற்றும் இந்த கேஸ் சம்பந்தப்பட்ட சிலர் மர்மமான முறையில் இறந்தும் போகின்றனர். கடைசியில் ஜோயலை கொன்றது யார்? எதற்காக? என்பதை நாயகன் திவாகர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் VR.மணி சேய்யோன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சுந்தர். C நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡சுவாரஸ்யமான முதல்பாதி கதைக்களம்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் பாடல்கள்
➡மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
ரேட்டிங்: ( 2.75 / 5 )