டிராகன் கதை
கதையின் நாயகன் ராகவன் பள்ளியில் நன்றாக படிக்கிற, நல்ல பையன். ராகவன் ஒரு பெண்ணை காதலிப்பான் தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்கிறான், ஆனால் அந்த பெண்ணுக்கு கெட்ட பசங்களை தான் பிடிக்கும் என சொல்கிறாள். இதனால் தான் கல்லூரியில் கெட்ட பையனாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.ராகவன் கல்லூரிக்கு டிராகன் என்ற பெயரோடு செல்கிறான், கெட்ட பையனாக இருப்பதோடு, படிக்காமல் சுற்றுகிறான்.
Read Also: Ramam Raghavam Tamil Movie Review
கல்லூரியில் கீர்த்தி என்ற பெண்ணை காதலிக்கிறான், இவனின் தோல்விகளை பார்த்து கீர்த்தி, டிராகனை விட்டுச்செல்கிறாள். கல்லூரியின் முடிவில் 48 அரியர் வைக்கிறான். பொய்யான சான்றிதழ்களை வைத்து வேலைக்கு சென்றதை அறிந்த கல்லூரியின் டீன், டிராகனை 48 அரியரையும் 3 மாதத்தில் க்ளியர் செய், இல்லையென்றால் வேலை போய்விடும் என சொல்கிறார், இதற்கடுத்து டிராகன் மொத்த அரியரையும் க்ளியர் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡பிரதீப்- ன் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡காமெடிகள்
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சிறப்பான இறுதி காட்சி
படத்தில் கடுப்பானவை
➡எதுவும் இல்லை
ரேட்டிங்: ( 3.75 / 5 )