ராமம் ராகவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ராமம் ராகவம் கதை

கடலூரில் அரசாங்க வேலையில் இருக்கிறார் தசரதன், இவருக்கு ராகவன் என்ற பையன் இருக்கிறான். தசரதன் மிகவும் நேர்மையானவர், ஆனால் இவரின் மகனோ சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊதாரித்தனமாக சுற்றுக்கொண்டிருக்கிறான். பையன் இப்படி இருப்பதால் தசரதன், ராகவனை பெட்ரோல் பங்கில் வேலைக்கு செய்துவிடுகிறார். அங்கு ராகவன் பெட்ரோல் திருடி மாட்டிக்கொள்ள, ஒரு ரவுடியிடம் பணம் வாங்கி போலீசிடம் கொடுத்து இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடுகிறான்.

Read Also: Nilavuku En Mel Ennadi Kobam Tamil Movie Review

ரவுடிகளுக்கு தேவையான ஒரு முக்கியமான கையெழுத்தை, தன் அப்பாவிடம் வாங்கித்தருவதாக கூறி, ராகவன் ரவுடிகளிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பான். இது அப்பாவுக்கு தெரியவர, மகனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி, போலீசிடம் பிடித்துக்கொடுக்கிறார். இதனால் கோபமான ராகவன் அப்பாவை கொன்று அவரின் வேலையை அடைய நினைக்கிறான். இதற்கடுத்து ராகவன் என்னவெல்லாம் செய்தான் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை நடிகர் தன்ராஜ் நடித்து இயக்கி, இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡சமுத்திரக்கனி & தன்ராஜ் நடிப்பு
➡மற்ற அனைவரின் சிறப்பான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சிறப்பான திருப்பங்கள்
➡தந்தை, மகனின் உணர்ச்சிகரமான காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡ குறை சொல்வதற்கு எதுவும் இல்லை

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை“சினிமாவின் எதிர்காலம் இனி ஏஐ, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில்” இயக்குநர் ஆர்.கே. செல்வமணி!
அடுத்த கட்டுரைடிராகன் தமிழ் திரைப்பட விமர்சனம்