படவா கதை
கதையின் ஆரம்பத்தில் மலேசியாவில் கதையின் நாயகன் வேலன் பார் ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கிறார். சில காரணங்களால் அந்த வேலையும் இழந்து, சொந்த ஊர் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது தான் ஊர் திரும்பினால் ஊர் மக்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயத்தில் இருக்கும்போது. நண்பர்கள் என்ன காரணம் என கேட்க தன் கதையை கூற ஆரம்பிக்கிறார் வேலன்.ஊரில் வெட்டியாக இருக்கும் நாயகனும், அவரின் நண்பன் ஒரப்பு- உம் மக்களை ஏமாற்றியும், திருடியும், குடித்துக்கொண்டு இரவில் ஊர் மக்களை தூங்கவிடாமல் ரகளை செய்கிறார்கள்.
Read Also: Murmur Tamil Movie Review
மக்களையும் வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து நாளுக்கு நாள் இவர்களின் ரகளையும் அதிகமாகிகொண்டே போக, ஒருக்கட்டத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்து நாயகனை வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள், அப்போது கூட தன் காதலி சொன்னதால் மட்டுமே நாயகன் வெளிநாடு செல்கிறான். இந்த நிலையில் தான் ஊர் சென்றால் ஊர் மக்கள் அடிப்பார்களோ? என்ற பயத்தில் இருக்கும் நாயகனை, மலேசியா நண்பர் ஏதும் நடக்காது என சொல்லி ஊருக்கு அனுப்புகிறார், நாயகன் ஊருக்கு சென்றதும் என்னவெல்லாம் நடந்தது என்பதும்? காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் KV. நந்தா இயக்கியுள்ளார்.