அஸ்திரம் கதை
கதையின் ஆரம்பத்தில் 8 நூற்றாண்டில் ஜப்பானில் இருந்த ஒரு secret புத்தகத்தை பற்றி சொல்லப்படுகிறது. தற்போது கொடைக்கானலில் கதையின் நாயகன் அகிலன் சில திருடர்களை பிடிக்கும்போது குண்டு அடிபட்டு ஓய்வில் இருக்கிறார், அப்போது இவரின் எல்லைக்குட்பட்ட ஒரு பார்க்கில் ஒரு நபர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு இறந்துவிடுகிறார். இந்த கேஸை பற்றி தன் உதவியாளர் சுமந் உதவியுடன் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அகிலன்.
Read Also: Varunan Tamil Movie Review
இந்த தற்கொலை போலவே சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஒருவரும், சென்னையில் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டு இருந்திருப்பதை அறிந்த அகிலன் இந்த மூன்று தற்கொலைக்கும் யாரோ பின்னணியில் இருப்பதை உறுதி செய்கிறார், பிறகு அவன் யார் என்பதை தேட ஆரம்பிக்கிறார். இதற்கெல்லாம் யார்? காரணம் என்பதும், எதற்காக அவன் இப்படி செய்கிறான் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை எழுத்தாளர் ஜெகன் MS எழுத, இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார்.