முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

































