ஆல் பாஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆல் பாஸ் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் மைதீன் இயக்கத்தில், ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவாகி வெளியாகியுள்ள ‘ஆல் பாஸ்’ (All Pass) திரைப்படத்தின் முழுமையான திரை விமர்சனம்

ஆல் பாஸ் கதை

சென்னை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வாழும் மூன்று எளிய குடும்பங்கள். வறுமையிலும் ஒன்றுபட்ட சகோதர்களாக அன்போடு வாழும் ஜெய் பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் குடும்பத்தினருக்கு எதிர்பாராதவிதமாக அரசியல்வாதி/எம்.எல்.ஏ-வுக்குச் சொந்தமான ரூ. 5 கோடி கருப்புப் பணம் கிடைக்கிறது.

திடீரென கையில் கிடைத்த பெரும் பணத்தால், அந்த குடும்பங்களுக்குள் பேராசையும் பிளவுகளும் எழுகின்றன. அதேசமயம், பணத்தை இழந்த எம்.எல்.ஏ தன் ஆட்களை வைத்து அதைத் தேடத் தொடங்குகிறார். கையில் பணம் இருந்தும் அதை வெளியே செலவழிக்க முடியாமல் தவிக்கும் சூழலில், அந்த குடும்பங்களின் உறவுகளுக்குள் என்ன நடக்கிறது? எம்.எல்.ஏ-விடமிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பெரிய நட்சத்திர ஆடம்பரங்கள் இல்லாவிட்டாலும், ஒரு நல்ல கருத்தையும் சுவாரஸ்யமான திரைக்கதையையும் நேர்மையாகக் கையாண்ட குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல சோஷியல் த்ரில்லர் திரைப்படமாக ‘ஆல் பாஸ்’ அமைந்திருக்கிறது.

Read Also: Yezhu Kadal Yezhu Malai Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனுபவமிக்க நடிகர்களான ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, செந்திகுமாரி, பிரசன்ன பாலச்சந்திரன் மற்றும் வினோதினி ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றனர்
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனம் & ரன்டைம்
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡திரைக்கதை தொய்வு
➡வலுவில்லாத இரண்டாம் பாதி

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!
அடுத்த கட்டுரைதாய்நிலம் தமிழ் திரைப்பட விமர்சனம்