இரவின் நிழல் தமிழ் திரைப்பட விமர்சனம்

Iravin Nizhal Tamil Movie Review

இரவின் நிழல் உலகிலேயே முதல் நான் லீனியர் சிங்கள் ஷாட் திரைப்படம்

இரவின் நிழலின் கதை :
படம் தொடங்குவதற்கு முன்பு 30 நிமிடம் படத்தை உருவாக்கிய வீடியோ ஒளிபரப்பாகிறது பிறகுதான் கதைக்களம் தொடங்குகிறது… ஒருவனுடைய வாழ்வில் ஏற்படும் பிரச்னை அவனை எப்படி மாற்றுகிறது மற்றும் அவன் செய்த சில தவறுகளால் அவனுக்கு ஏற்படும் பின் விளைவுகளே மீதி கதையாக உள்ளது இந்த கதையை பார்த்திபனின் கற்பனைக்கேற்ப அவர் கையாண்டு இருக்கிறார்…
பார்த்திபன் இரவின் நிழலை இயக்கி நடித்திருக்கிறார் மற்றும் இவரை தவிர முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்துள்ளார் இதுவரை நாம் பார்க்காத ஒரு பிரகிடாவாக திரையில் தோன்றுவார் இவரையடுத்து வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் நடித்துள்ளனர் இதில் பார்த்திபனுக்கு குழந்தையாக வரும் சிறுமி ஒரு இடத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்…. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே ஷாட்டில் எடுத்த திரைப்படம் என்பதுதான்.

இரவின் நிழலுக்கு ஏ.ஆர். ரகுமானின் இசை மேலும் பலத்தை கூட்டியுள்ளது , மற்றும் ஆர்தர் ஆ. வில்சனின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆகவேண்டும் ஏனென்றால் முழு படத்தையும் ஒரே ஷாட்டில் புதுவித உக்தியுடன் எடுத்ததற்குத்தான் இந்த படம் முழுக்கவே இப்படி அனைவரும் உழைப்பும் உள்ளது…
இந்த இரவின் நிழல் திரைப்படம் மொத்தம் 90 நாட்கள் படப்பிடிப்பில் 22 முறை சொதப்பலில் முடிந்து 23 முறை வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது, இத்திரைப்படம் 15-07-2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

படத்தில் சிறப்பானவை
பார்த்திபனின் புதிய முயற்சி
படம் எடுக்கப்பட்ட விதம்
அனைவரின் நடிப்பு
ஏ.ஆர். ரகுமானின் இசை
ஆர்தர் ஆ. வில்சனின் ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
சில இடங்களில் செட் என்பது தெரிகிறது ஆனால் பெரிதளவில் பாதிப்பில்லை

Rating : (4.25/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *