Vikram In a CCTV Awareness Film Titled Third Eye

இயக்குனர் ஹரி இயக்கத்தில விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா நடித்து, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில நாளை வெளிவர இருக்க படம்தான் சாமி ஸ்கொயர். 2003ல வெளிவந்த சாமி தொடர்ச்சிதான் சாமி ஸ்கொயர. இந்த படத்தோட ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்தது. இதிலும் சீயான் விக்ரம் அதிரடியான காவல் அதிகாரியாக நடிச்சிருக்குறதால விக்ரம் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்போட காத்துட்டு இருக்காங்க இந்த படத்துக்கு.

இப்படி நாளை, படம் வெளியாகுற இந்த நேரத்தில “மூன்றாவது கண்” ன்னு ஒரு சிசிடிவி விழிப்புணர்வு குறும்படத்தில நடிச்சிருக்காரு நடிகர் விக்ரம். இதுல வீடுகள், கடைகள்ல சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும், சிங்கப்பூர் போல சென்னையிலும் பெண்கள் பயமில்லாமல் நடமாடும் காலம் கூடிய சீக்கிரமே வரும்னும், இதுபோக சிசிடிவி கேமரா மூலம் குற்றங்கள் குறையும் எனவே சிசிடிவி பொருத்துவது காலத்தின் கட்டாயம்ன்னு தெரிவிச்சிருக்காரு சீயான் விக்ரம்.

அதுமட்டுமில்லாமல் சமூக அக்கறை உள்ள செயல்களில் ஈடுபடுவதால் திரைபிரபலங்கள் உட்பட பலர் சீயான் விக்ரமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த குறும்படத்தை சென்னையில உள்ள மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபுதிய படங்களில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை
அடுத்த கட்டுரைMohanlal Apologises For His Comment On Kerala Nun