நானே வருவேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நானே வருவேன் கதை
கதிர் மற்றும் பிரபு அண்ணன் தம்பிகளாக இருக்கின்றனர் , அதில் அண்ணன் கதிர் சிறுவயதில் ஒரு தப்பு செய்துவிடுவார், அதனை கண்டிக்க கதிரின் அப்பாவை அவரை வீட்டிற்கு வெளியில் உள்ள மரத்தில் கட்டிவைக்கிறார் அப்போது செல்வராகவன் கதிரை கடத்திக்கொண்டு சென்று கொடுமைப்படுத்துகிறார் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்த கதிர் அவரின் அப்பாவை கொன்றுவிடுகிறார், பிறகு ஒரு சாமியார் கதிர் மற்றும் பிரபு ஒன்றாக இருக்க கூடாது என்கிறார் இதனால் கதிரின் அம்மா கதிரை அங்கேயே விட்டுவிட்டு பிரபுவை மட்டும் அவருடன் அழைத்து செல்கிறார் , பிறகு பல ஆண்டுகள் கழித்து பிரபு ஒரு காரணத்திற்காக கதிரை கொள்ளவேண்டிய சூழ்நிலை வருகிறது, அதற்கான காரணமும் கடைசியில் பிரபு கதிரை கொன்றாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

இதனை இயக்குனர் செல்வராகவன் அவருக்கே உண்டான தனிப்பாணியில் தரமான கதையை கூறியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
கதைக்களம் & திரைக்கதை
தனுஷின் அரக்கத்தனமான நடிப்பு
யுவனின் பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *