ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பம்

இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் ஆகியோர் இணைந்த ‘இவன் தந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் இப்படத்திற்காக கைகோர்கின்றனர்.

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:

இயக்குனர் : ஆர்.கண்ணன் ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம் சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா
மக்கள் தொடர்பு : ஜான்சன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅற்றைத்திங்கள் அந்நிலவில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
அடுத்த கட்டுரைஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் ” வந்திய தேவன் மீது P C R வழக்கு “