நவரச நாயகன் கார்த்திக் உடன் ” தீ இவன் ” படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M. அப்பு, மக்கள் தொடர்பு- மணவை புவன்.
பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் T.M. ஜெயமுருகன்
பேசியவை….

நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இந்த படத்தில் இடம் பெற உள்ள
” மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் ” என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம்,

அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.

நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார்.
அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் T.M. ஜெயமுருகன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘பனாரஸ்’ படத்தினை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி
அடுத்த கட்டுரைசமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் நவம்பர் 11, 2022 அன்று வெளியாகிறது!